கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு கையின் ஆறாவது விரலை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 வயது சிறுமிக்கு நாக்கில் அடியில் அதிக சதை இருப்பதை பார்த்த மருத்துவர் அதை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் பெற்றோர் ஒப்புதல் இன்றி அவர் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கைவிரலில் அறுவை சிகிச்சையை அவர் முறைப்படி செய்ததாகவும் கூடுதலாக அவர் பெற்றோரிடம் அனுமதி கேட்காமல் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.