Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொஞ்சம் யோசிச்சு பேச மாட்டிங்களா...? வாய்துடுக்காக பேசிய நடிகர் மீது வழக்கு ...

Advertiesment
கொஞ்சம் யோசிச்சு பேச மாட்டிங்களா...? வாய்துடுக்காக பேசிய நடிகர் மீது வழக்கு ...
, சனி, 13 அக்டோபர் 2018 (16:51 IST)
கடந்த வாரத்துக்கு முன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  தலைமையிலான அமர்வு சரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது  பெண்கள் சென்று வழிபடலாம் என்று தீர்ப்பு கூறியிருந்தது. அதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானமும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக கருத்து தெரிவித்து பெண்கள் வழிபாடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்படும் என்று பொறுப்புடன் கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள ஐயப்ப்பன் பக்கதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் பெண்கள் யாரும் சபரிமலைக் கோவிலுக்குள் நுழைய கூடாது என்று பலகட்ட பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்.
 
இது சம்பந்தமாக முன்னால் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறிய கருத்தில் ’மத சம்பந்தமான பாரம்பர்ய விசயத்தில்  நீதிமன்றம் தலையிட  கூடாது ’என்று கூறியிருந்தார். அவர் கூறிய கருத்தானது சுரீம்கோர்ட்டிம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா கருத்துடன் ஒத்திருந்தது அதாவது: ’பாரம்பரிய ஐயப்ப பக்தர்களின் இந்து அடையாளங்களில் அரசு மற்றும் நீதிமன்றம் தலையிடக் கூடாது’ என்று தன் மாறுபட்ட தீர்ப்பு அளித்திருந்த போதிலும் மிகப் பெரும்பான்மையான நீதிபதிகளின்  தீர்ப்பின் அடிப்படையில் தீபக் மிஸ்ரா அவர்களுடைய தீர்ப்பு அன்று ஒருமனதாக அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது அதற்கு எதிராக இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஐயப்பபக்தர்கள் போன்றோர் பல கட்ட போரட்டங்கள் மர்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
 
அதில் மலையாள நடிகரும் பா.ஜ.க ஆதரளவாளருமான கொல்லம் துளசி  கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் சபரிமலை கோவிலுக்குள் நுழையும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை திருவனந்தபுர முதர்வர் அலுவலகத்திற்கு ஒன்றும், இன்னொரு துண்டை டெல்லிக்கும் அனுப்பி வைப்பேன் இவ்வாறு அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படி பேசியதையடுத்து அவர் மீது போலீஸாஎ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
மைக் கிடைத்தால் யார் வேண்டுமாலும் என்ன வேண்டுமானாலும் பேச நினைப்பதை முதலில் நிறுத்தினால்தான் பொறுப்புள்ள சமுதாயம் மலரும் என்பதை கருணாஸ் மற்றும் கொல்லம்துளசி போன்றோர் உணர வெண்டும் என்பதே  பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத லஞ்ச ஒழிப்புத்துறைதானே சொல்லனும்.. இவர் ஏன் சொல்றார்?