சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேதாஜியின் இறந்த தேதி குறித்த தகவலை வெளியிட்டார்.
அந்த பதிவில் அவர் மகத்தான புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு இதயபூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன். அவரது தலைமை, தைரியம், சமூக நீதி போராட்டம் ஆகியவை ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கம் அளிக்கிறது.
மேலும், நேதாஜியின் படத்துடன் அவரது வாழ்நாள் "ஜனவரி 23, 1897 – ஆகஸ்ட் 18, 1945" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நேதாஜியின் இறந்த தேதி 1945 ஆகஸ்ட் 18 என்று குறிப்பிட்டதற்கு பாஜக காட்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேதாஜி இறந்த தேதி குறித்து ஆதாரம் இல்லாத தகவலை கூறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மகாசபை மாநில தலைவர் தெரிவித்தார். ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.