Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடிக்கும் வழிமுறைகளை வெளியிட்ட பொதுசுகாதாரத்துறை!!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:42 IST)
பட்டாசு வெடிக்கும் போது விபத்துகள் அதிகம் நிகழும் என்பதால் பாதுகாப்பான வழிமுறைகளை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

 
தீபாவளி நெருங்கியுள்ளதால் பட்டாசு வெடிப்பது பொதுவான ஒன்றாகும். இதனிடையே பட்டாசு வெடிக்கும் போது விபத்துகள் அதிகம் நிகழும் என்பதால் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி தீபாவளி கொண்டாட வேண்டும் என சில வழிகாட்டு நெறிமுறைகளை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. பட்டாசுகளை திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும். 
2. பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
3. எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது. 
4. குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது.
 5. பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
6. சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
7. காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும், வெற்றுக் கைகளால் பட்டாசு கொளுத்தக்கூடாது.
 8. பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
 9. முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். 
10. மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை எறியக் கூடாது. 
11. சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments