Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் விவகாரம்: திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டம்!

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (21:58 IST)
காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து தரும் 370ஆவது பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு செய்ததோடு, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து இது குறித்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டதால் கூடிய விரைவில் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படும் என தெரிகிறது 
 
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மக்களவையிலும் இதுகுறித்து திமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்துப் பேசினர். இதனை அடுத்து தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் தலைமையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 10ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
காஷ்மீர் குறித்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பெற்றுள்ள நிலையில் திமுக கூட்டும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தால் என்ன பயன் என்று தெரியவில்லை. மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று கூறப்பட்டாலும் இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமே கலந்து கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியே இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்காமல் மறைமுக ஆதரவு கொடுத்துள்ள நிலையில் திமுகவின் இந்த கூட்டம் ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments