சமீபத்தில் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு எம்பி முகமது ஃபைசில் தகுதி நீக்கத்தை மக்களவை செயலாளர் திரும்ப பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்சத்தீவு எம்பி முகமது ஃபைசில் எம்பி பதவியை மக்களவை செயலர் தகுதி நீக்கம் செய்த நிலையில் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கேரள நீதிமன்றம் லட்சத்தீவு முக எம் பி முகமது ஃபைசில் தகுதி நீக்கத்திற்கு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால் கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்த போதிலும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் தகுதி நீக்கத்தை திரும்ப பெறுவதாக மக்களவைச் செயலாளர் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.