மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

Siva
திங்கள், 9 ஜூன் 2025 (18:13 IST)
இந்தூரை சேர்ந்த புதுமண தம்பதிகளான ராஜா மற்றும் சோனம், மேகாலயா மாநிலத்திற்கு ஹனிமூன் சென்றபோது திடீரென காணாமல் போயினர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து ராஜாவின் உடல் மீட்கப்பட்டது. அதன்பின் சோனம் தான் அவருடைய கணவரை கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவரை போலீசார் கைது செய்து உள்ள நிலையில், அவர்தான் கொலையை தூண்டியதாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சோனம் தந்தை தன் மகளை அப்பாவி என்று கூறியுள்ளார். மேகாலயா முதல்வர் மற்றும் அம்மாநில போலீசார் பொய் சொல்கிறார்கள் என்றும், என் மகளுக்கும் அவருடைய கணவரின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இரண்டு குடும்பங்களும் ஒப்புக்கொண்டு தான் இந்த திருமணம் நடந்ததாகவும், என் மகள் கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும், சிபிஐ விசாரித்து உண்மை வெளிவந்தால் மேகாலயா போலீஸ் அதிகாரிகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் தனது மகள் ஜூன் 8-ம் தேதி உடன் தொலைபேசியில் பேசினார் என்றும், ஒரு சாலையோர உணவகத்தில் இருப்பதாக அவர் கூறிய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் போலீசார் அவரை கைது செய்துள்ளதாகவும், இதுவரை அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments