Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

Siva
திங்கள், 9 ஜூன் 2025 (18:04 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னாள், மேகாலயா மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற தம்பதியில், கணவரையே மனைவி ஆள் வைத்து கொலை செய்து விட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
தற்போது, உத்தர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற நிலையில், அவர்களை காணவில்லை என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த மே ஐந்தாம் தேதி திருமணம் நடந்த இந்த தம்பதிகள், தேனிலவுக்காக சிக்கிம் மாநிலத்திற்கு மே 24ஆம் தேதி சென்றனர். இவர்கள் சென்ற வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பெய்த கனமழை காரணமாக லேசான நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அப்போது அந்த வாகனம் திடீரென நதியில் விழுந்ததாகவும் தெரிகிறது.
 
இந்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வாகனத்தில் சென்ற புதுமண தம்பதிகளை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
வாகனம் நதியால் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் அல்லது மணல் மூலம் மூடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுவதால், புதுமண தம்பதிகளின் பெற்றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
15 நாட்களுக்கு மேல் தேடும் பணி நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், இதுவரை தம்பதிகள் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments