Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறையில் நிற்க கூட முடியாத நிலையில் நடிகர் திலீப்? - அதிர்ச்சி செய்தி

சிறையில் நிற்க கூட முடியாத நிலையில் நடிகர் திலீப்? - அதிர்ச்சி செய்தி
, திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (18:59 IST)
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் திலீப் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.


 

 
கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜாமீன் கேட்டு அவர் விண்ணப்பித்த மனுவையும் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது. எனவே, தற்போது அவர் கேரளாவில் உள்ள ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  அவரது காதில் வெர்டைகோ எனப்படும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் நிற்ககூட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. அவருக்கு சிறை மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளித்தும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாதுகாப்பு கருதி, அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலையில் சிறை நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது. 
 
அவரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது. எனவே, அவரது உடல்நிலையை காரணம் காட்டி, அவரின் வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. 
 
அதே சமயம், அவரை சிறையிலிருந்து வெளியே அழைத்து வர நடத்தப்படும் நாடகம் இதுவென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க துணை தூதரகத்தின் துணைத் தூதகராக பொறுப்பேற்ற ராபர்ட் பர்ஜெஸ்!!