இந்திய பெண் ராணுவ அதிகாரி குறித்து பாஜக அமைச்சர் பேசிய வழக்கில் உச்சநீதிமன்றம், அமைச்சரை கடுமையாக கண்டித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வந்த நிலையில், இந்தியா பயங்கரவாதிகளை அழிக்க ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தியது. இந்த ஆபரேஷன் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்திருந்த நிலையில், அவரை குறித்து விமர்சித்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா, அவரை “பயங்கரவாதிகளின் சகோதரி” என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அவர்மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் மன்னிப்பு வீடியோ வெளியிட்டதுடன், தன் மீது வழக்குப்பதிவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைச்சரை கண்டித்துள்ளனர். “மன்னிப்பு வீடியோக் கூட தவறை உணர்ந்து வெளியிட்டதாக தெரியவில்லை. நீங்கள் ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதி என்னும்போது உங்கள் வார்த்தைகளை கவனித்து பேச வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
அதேசமயம், அமைச்சர் விஜய் ஷாவை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்ததுடன், அவர் கூறிய கருத்த்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.
Edit by Prasanth.K