இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் தல தோனி என்று கூறினால் அது மிகையில்லை. இந்திய அணிக்காக உலகக்கோப்பை, மினி உலக கோப்பை, டி-20 உலகக்கோப்பை என மூன்று உலகக்கோப்பையை வென்ற ஒரே கேப்டன் தல தோனிதான்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதிலும் ரசிகர்கள் கூட்டம் குறையாத நிலையில் தற்போது அவரை தேடி மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது
கடந்த 2011 முதல் கல்ப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ள தோனி. தற்போது அதே நிறுவனத்தின் ஒருநாள் சி.இ.ஓ.,வாக தோனி வேலை செய்துள்ளார். இதன்மூலம் தனது நீண்ட நாள் கனவு நனவாகியதாக தோனி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கல்ப் இந்தியா நிர்வாகிகள் கூறியபோது, 'தோனி, கல்ப் ஆயில் இந்தியா நிறுவனத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளார். அவர் நீண்ட நாட்களாக ஒரு கார்ப்ரேட் நிறுவனம் எப்படி இயங்குகிறது என்பதை காண ஆசையாக இருந்தார். அதனால் அவர் ஒருநாள் சி.இ.ஓ.,வாக வேலை செய்தார். அந்த ஒருநாளில் உண்மையான சி.இ.ஓ.,வாகவே மாறிய தோனி, மிகப்பெரிய முடிவுகளை சர்வசாதரணமாக எடுத்தார். ’ என்றனர்