அசாம் மாநிலத்தில் நேற்று போகிபீல் ரயில் பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அசாமின் கிழக்கு பகுதி மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் 94 கிமீ நீளம் கொண்ட போகிபீல் பாலம் அமைந்துள்ளது.
ஆனால், இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தேவகவுடா முகவும் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியது பின்வருமாறு,
காஷ்மீருக்கு ரயில்பாதை, டெல்லி மெட்ரோ ரயில், அசாம் போகிபீல் ரயில், சாலைப் பாலம் ஆகிய திட்டங்களுக்கு என்னுடைய ஆட்சி காலத்தில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நான்தான் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி முதல்கட்ட நிதியை ஒதுக்கினேன். இந்த திட்டங்களுக்கு முதல்கட்டமாக தலா ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்தேன். ஆனால், இந்தத் திட்டங்கள் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. மக்கள் என்னை மறந்துவிட்டார்கள். என்றார்.
யார் என்னை நினைவு வைத்திருக்கிறார்கள்? சில நாளேடுகள் மட்டும் இந்த பாலம் குறித்து எழுதும் போது எனது பெயரையும் குறிப்பிடுகிறார்கள் அவ்வளவுதான் என வேதனையுடன் பேசினார்.