Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு: நன்றிக்கடன் செலுத்தும் தேவகவுடா

Advertiesment
ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு: நன்றிக்கடன் செலுத்தும் தேவகவுடா
, செவ்வாய், 24 ஜூலை 2018 (07:50 IST)
தேவகவுடாவின் மகன் குமாரசாமி, கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ள நிலையில் அதற்கு நன்றிக்கடன் செலுத்த ராகுல் காந்தி பிரதமராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிக்கும் என முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
 
நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேவகவுடா கூறியதாவது: கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது, 79 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும்,, 38 தொகுதிகளில் ம.ஜ.த., கட்சியும் வெற்றி பெற்றது, இருப்பினும் மதஜ கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்கும் முடிவை ராகுல் எடுத்தார். அவரது இந்த தொலைநோக்கு பார்வை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
 
webdunia
முதிர்ச்சியான தலைவர்கள் எடுக்கும் முடிவை ராகுல் காந்தி எடுத்துள்ளதால் அவரே நாட்டை ஆளும் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் என்ற முடிவை எடுத்துள்ளேன். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த மஜத கட்சி முயற்சி எடுக்கும். இவ்வாறு தேவகவுடா தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷாவுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு: மீண்டும் முதல்வர் ஆகிறாரா?