Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சோனியாவின் அழைப்பை நிராகரித்த முன்னாள் பிரதமர்

Webdunia
புதன், 31 மே 2017 (05:46 IST)
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் நிறைவடைய உள்ளதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை மாதம் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.



 


இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் வலுவான பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. பாஜகவுக்கு தெலுங்கு தேசம், அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு கொடுக்கும் என்பதால் பாஜக நிறுத்தும் வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவகெளடாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் நிற்குமாறு சோனியா அழைப்பு விடுத்ததாகவும், இந்த அழைப்பை தேவகெளடா நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் சார்ப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இந்த தேர்தலில் பலிகடா ஆக விரும்பவில்லை என்று தேவகெளடா தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தான் கர்நாடகத்தில் மாநில கட்சியை பலப்படுத்த பணியாற்றி வருவதாகவும், கர்நாடகத்திலேயே அரசியல் செய்ய விரும்புவதாகவும், அதனால் எனக்கு ஜனாதிபதி பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும் அவர் சோனியாவுக்கு பதிலளித்துள்ளார்.

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments