Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலை மாற்றிய மறுநிமிடம் மணமக்கள் செய்த காரியம் என்ன தெரியுமா? ஆச்சரிய தகவல்

Webdunia
புதன், 31 மே 2017 (05:01 IST)
பொதுவாக திருமணம் முடிந்தவுடன் மாலை மாற்றி கொண்ட மணமக்கள் பெரியவர்களிடம் ஆசி பெறுவது வழக்கம். ஆனால் கரூரில் மாலை மாற்றிய தம்பதிகள் ஆளுக்கொரு காரை எடுத்து கொண்டு மிக வேகமாக தனித்தனியே சென்றனர். இவர்கள் சென்றது எங்கே தெரியுமா? பி.எட் தேர்வு எழுத....





கரூரை சேர்ந்த 27 வயது பாரதி முருகன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மைதிலி என்பவருக்கும் நேற்று முன் தினம் திருமணம் முடிந்தது. இருவரும் பி.எட். தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். காலை பத்து மணிக்கு தேர்வு ஆரம்பமாகும் என்பதால் தாலி கட்டி, மாலை மாற்றிய அடுத்த நிமிடம் இருவரும் வெவேறு கார்களில் தங்களுடைய தேர்வு எழுதும் மையத்திற்கு சென்றனர்.

மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மணமகன் பாரதி முருகனுக்கும், மணமகள் மைதிலிக்கு அவரவர் நண்பர்கள், தோழிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இல்லற வாழ்க்கையில் இணைந்த இருவரும் பி.எட். தேர்வில் வெற்றி பெற்று சிறப்பான வாழ்க்கையை தொடர அவர்கள் வாழ்த்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments