வேலை நேரத்தில் கம்யூட்டரில் சினிமா பார்த்த மருத்துவமனை ஊழியர்: துணை மந்திரியின் நடவடிக்கை
வேலை நேரத்தில் கம்யூட்டரில் சினிமா பார்த்த மருத்துவமனை ஊழியர்: துணை மந்திரியின் நடவடிக்கை
டெல்லி துணை முதல் மந்திரி மனீஷ் சிசோடியா அரசு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டார் அப்போது ஒரு ஊழியர் தனது வேலை செய்யும் கம்யூட்டரில் சினிமா படம் பார்த்து கொண்டு இருந்ததைக் கண்டு கண்டித்துள்ளார்.
சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அந்த மருத்துவமனை ஊழியர் மிகவும் உற்சாகமாக சினிமாவை பார்த்து கொண்டு இருந்தார். அதே சமயம் அதிகமான நோயாளிகள் வெளியே காத்து கொண்டு இருந்தனர்.
இதை பார்த்த துணை மந்துரி ஊழியரை, நீங்கள் சினிமா பார்க்கவா இங்கு வந்தீர்கள் என கேட்டு எச்சரித்து உள்ளார். அவரது நடத்தை தொடர்பாக மூத்த அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார். நாங்கள் உங்களுக்கு கம்யூட்டர் வழங்கி உள்ளது வேலை செய்ய வேலை நேரத்தில் சினிமா பார்ப்பதற்கு அல்ல என அந்த ஊழியரை கண்டித்து உள்ளார்.