Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகருடன் துணை முதல்வர் மனைவி நடனம்; எதிர்க்கட்சி கடும் கண்டனம்

dance
, வியாழன், 19 ஜனவரி 2023 (18:11 IST)
நடிகருடன் துணை முதல்வர் மனைவி நடனம்; எதிர்க்கட்சி கடும் கண்டனம்
நடிகர் ஒருவருடன் துணை முதல்வரின் மனைவி நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் துணை முதலமைச்சர் ஆக இருப்பவர் தேவேந்திநாத் பட்நாவிஸ். இவரது மனைவி அமிர்தா பட்னாவிஸ் சமீபத்தில் அரசு பங்களாவில் நடிகர் ஒருவருடன் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்
 
இந்த வீடியோ வைரலான நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உட்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ அரசு பங்களாவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு பங்களா நடிகருடன் நடனம் ஆடுவதற்காகவா கட்டப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது சட்டவிரோதம் என்று எதிர் கட்சிகள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக அரசு டிஸ்மிஸ் ஆகி 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது: சுப்பிரமணியன் சுவாமி