Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்! – உஷாராகும் தென் மாநிலங்கள்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:40 IST)
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கமே இன்னும் குறையாத நிலையில் மற்ற வைரஸ்கள், காய்ச்சல்கள் ஏற்பட்டு வருவது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களில் வட மாநிலங்கள் சிலவற்றில் டெங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 225 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், அதில் 38 பேர் குழந்தைகளாவர். இதுபோல காஷ்மீரில் 20க்கும் அதிகமானோருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் உத்தர பிரதேசத்தில் காய்ச்சலால் 250 பேரும், டெங்கு காய்ச்சலால் 25 பேரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

அடுத்த கட்டுரையில்
Show comments