முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Mahendran
புதன், 1 ஜனவரி 2025 (14:29 IST)
முஸ்லிம்களுக்கு வக்பு வாரியம் இருப்பது போல், இந்துக்களுக்கு சனாதன வாரியம் அமைக்க வேண்டும் என்று குரல் எழுந்து வரும் நிலையில், மத்திய அரசு இதுகுறித்து முக்கிய முடிவை விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 26 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் திரிவேணி சங்கமம் நடைபெற உள்ள நிலையில், இதில் நான்கு சங்கராச்சாரியார்கள் மற்றும் 13 அகார அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்தில் சனாதன வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் சனாதன தர்மத்தை காக்க, ஹிந்து கோயில்களின் நிலங்களை மீட்க சனாதன வாரியம் அவசியமாகிறது என்று கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்கு வக்பு வாரியம் இருப்பதை போல், இந்துக்களுக்கும் சனாதன வாரியம் வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

முஸ்லிம்களின் சொத்துக்களை காப்பதற்காக ஆங்கில அரசு உருவாக்கிய வக்பு வாரியம் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கும் நிலையில், சனாதன வாரியமும் இந்து கோயில்களின் சொத்துக்களை காக்க அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்குமா, சனாதன வாரியம் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞாயிறு முதல் தி.நகர் மேம்பாலம் திறப்பு.. போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?

இன்று இரவு 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இன்றுடன் ஓய்வு பெறுகிறது மிக் 21 போர் விமானம்.. 62 ஆண்டுகால சகாப்தம் முடிகிறது..!

கழிவறையில் பெண் ஊழியர்களை ஆபாச வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசியல் என்றால் என்ன என்பதை தேர்தலுக்கு பின் விஜய் புரிந்து கொள்வார்: எஸ்.வி. சேகர்

அடுத்த கட்டுரையில்
Show comments