Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் முதன்முறையாக ஆப்பிரிக்க வகை கொரோனா! – மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (08:31 IST)
உலகம் முழுவதும் பல்வேறு மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் ஒருவருக்கு ஆப்பிரிக்க வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் கொரோனா பாதித்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, பிரேசில், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட வீரியமிக்க உருமாறிய கொரோனா மாதிரிகளும் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னதாக இங்கிலாந்தில் பரவிய மாற்றமடைந்த கொரோனா மற்றும் பிரேசில் மாற்றமடைந்த கொரோனா பாதிப்பு இரண்டும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்சமயம் மூன்றவதாக ஆப்பிரிக்க வகை கொரோனா பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க வகை கொரோனா தொற்று இந்தியாவில் கண்டறியப்படுவது இதுவே முதன்முறை. இந்நிலையில் இம்மூன்று வகை கொரோனாவும் ஏற்கனவே பல உலக நாடுகளில் பரவியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments