Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று! – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (14:55 IST)
டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என சோனியா காந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி “டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. இது ஒரு அரசியல் சூழ்ச்சி. இந்த வன்முறை சம்பவம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ”டெல்லியில் நடந்த இந்த கலவரத்திற்கு மத்திய அரசும், உள்துறையும் பொறுப்பேற்க வேண்டும். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments