Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளம் தராத முதலாளி; கொன்று வீசிய ஊழியர்! – டெல்லியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (09:41 IST)
டெல்லியில் சம்பளம் குறைவாக கொடுத்ததால் முதலாளியை ஊழியரே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஓம் பிரகாஷ் என்பவர் பால் முகவராக இருந்து வந்துள்ளார். இவரிடம் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தஸ்லீம் என்பவர் டெலிவரி பாயாக பணியாற்றி வந்துள்ளார். கொரோனாவுக்கு முந்தைய காலங்களில் 15 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வந்த தஸ்லீமுக்கு தற்போது வியாபார சிக்கல்களால் குறைவான அளவே சம்பளம் வழங்கியிருக்கிறார் ஓம் பிரகாஷ்.

சம்பள விவகாரம் தொடர்பாக அடிக்கடி  ஓம் பிரகாஷுக்கும், தஸ்லீமுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த தஸ்லீம் தூங்கி கொண்டிருந்த ஓம் பிரகாஷ் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பிறகு கோணிப்பையில் கட்டி கிணற்றில் வீசியுள்ளார். அவரது குடும்பத்தினர் கேட்டபோது வியாபார ரீதியாக வெளியூர் சென்றுள்ளதாக பொய் சொல்லியுள்ளார்.

நீண்ட நாட்களாக ஓம் பிரகாஷ் வராததால் குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். அதேசமயம் ஓம்பிரகாஷ் கொன்று வீசப்பட்ட கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் கிணற்றை சோதனை செய்தபோது ஓம்பிரகாஷ் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தஸ்லீமிடம் போலீஸார் விசாரிக்கையில் சம்பள பிரச்சினையில் ஓம் பிரகாஷை கொன்றதாக தஸ்லீம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments