தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் அதிரடி கைது: கொச்சி வழியாக 10 கோடி அனுப்பியதாக தகவல்!
தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் அதிரடி கைது: கொச்சி வழியாக 10 கோடி அனுப்பியதாக தகவல்!
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றனர். சென்னை, கொச்சி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்ற விசாரணை நடத்த திட்டமிட்ட போலிசார் நேற்று அவர்களை சென்னை அழைத்து வந்து 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த வழக்கில் தற்போது அதிரடி திருப்பமாக டிடிவி தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் டெல்லியில் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தாய்லாந்தில் இருந்து கிளம்பி டெல்லி வந்தபோது அவரை கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து கொச்சி வழியாக 10 கோடி ரூபாயை நரேஷ் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியை சேர்ந்த நரேஷுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே நேரடி தொடர்பு இருந்ததா என விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் வருகின்றன.
இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்து வழக்கு நகர நகர டிடிவி தினகரனுக்கு எதிராக பிடி இறுகுவதாகவே தெரிகிறது. இந்நிலையில் தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் டெல்லி போசாரால் கைது செய்யப்பட்டிருப்பது தினகரனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.