என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

Siva
வியாழன், 20 நவம்பர் 2025 (08:31 IST)
டெல்லியில் உள்ள ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில், 16 வயது மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். 
 
காவல்துறையினர் கைப்பற்றிய தற்கொலை கடிதத்தில், பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தியதே தனது மரணத்திற்கு காரணம் என்று அவன் உருக்கமாகக்குறிப்பிட்டுள்ளான். மேலும், தன் பெற்றோரிடமும், அண்ணனிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, "எனது உறுப்புகளைத் தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள்" என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தான்.
 
மாணவனின் தந்தை, தன் மகனின் மனநல பிரச்சினைகள் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். அண்மையில், தவறி விழுந்த தனது மகனுக்க்கு  ஆசிரியர் உதவாமல், அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதாகவும் தந்தை கூறினார். இதேபோல மற்ற மாணவர்களும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
தற்கொலைக் குறிப்பின் அடிப்படையில், காவல்துறையினர் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments