Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி பல்கலையில் தமிழக மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை: என்ன நடந்தது?

, திங்கள், 13 மார்ச் 2017 (22:38 IST)
டெல்லி ஜவஹர்லால் பல்கலையில் கடந்த ஆண்டு ரோஹித் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவரின் மரணத்திற்கு நீதிகேட்கும் குழுவில் இருந்த முக்கிய மாணவர்களில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்ற தமிழக மாணவர் இன்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பல்கலைகழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சேலத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லி ஜே.என்.யூ பல்கலையில் எம்.பில் படிப்பு படித்து வருகிறார். தலித்துகளின் உரிமைகளுகாக போராடி வருபவர் இவர் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர் முத்துகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டெல்லி பல்கலையில் சமநிலை இல்லை என்றும் இனபேதம் பார்க்கப்படுவதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்./

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் இதுகுறித்த விசாரணை தொடங்கும் என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

மாணவர் முத்துக்கிருஷ்ணன் புத்திசாலியான மாணவர் என்றும் அவருடைய இழப்பு தங்கள் நட்பு வட்டாரத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும் அவரது சக மாணவர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா அணியில் உயிருள்ளவரை இருப்பேன்! செந்தில் பாலாஜி கூறுவதற்கு காரணம் வெயிட்டான கவனிப்பா?