Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசியூ-ல இருந்தா கூட விட மாட்டீங்களா? – டெல்லியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (11:03 IST)
டெல்லியில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி குருகிராம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கோமா நிலைக்கு சென்றதால் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக தன்னை ஒரு நபர் ஐசியூ வார்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தனது தந்தையிடம் எழுதி காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் வன்கொடுமை செய்த நபர் மருத்துவமனையில் பணி புரிபவர் அல்ல என தெரிய வந்ததையடுத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் ஐசியூ வார்டில் இருந்த இளம்பெண்ணை வெளி ஆள் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்