Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து கனமழை டார்கெட்டில் சென்னை! – அவசர எண்கள் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (10:38 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மழை பாதிப்பு அதிகரித்து வருவதால் அவசர தொடர்பு எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியிருந்தாலும் தொடக்கமே நல்ல மழையை சந்தித்து வருகிறது தமிழகம். நேற்று சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகள் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் மரங்கள், சுற்று சுவர்கள் பெயர்ந்து விழுந்து சேதாரம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்குதல், நோய் அபாயங்கள் ஏற்படும் என்பதால் இதுகுறித்து புகார் அளிக்க அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி புகார்களை 044-2538 4530, 044-2538 4540 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். மேலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மைய எண் 1913க்கு அழைத்தும் புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments