Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி உணவகத்தில் துப்பாக்கிச் சூடு: பில்லுக்கான தொகையை கேட்டதால் ஆத்திரம்

Advertiesment
டெல்லி உணவகத்தில் துப்பாக்கிச் சூடு: பில்லுக்கான தொகையை கேட்டதால் ஆத்திரம்
, செவ்வாய், 24 மே 2016 (13:13 IST)
டெல்லியில் லாஜ்பாத் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று இரவு சாப்பிட வந்த மூன்று பேர் சாப்பிட்ட உணவின் பில்லை செலுத்த மறுத்து உணவக உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.


 
 
வாசுதேவ் என்ற 60 வயது முதியவர் டெல்லியின் தென்கிழக்கில் உள்ள லாஜ்பாத் நகரில் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இவரது உணவகத்தில் நேற்று இரவு 10 மணிக்கு மாருதி ஸ்விப்ட் காரில் மூன்று பேர் சாப்பிட வந்துள்ளனர்.
 
சாப்பிட்ட மூன்று பேரும் பில்லுக்கான தொகையை செலுத்தாமல் போக முயற்சித்துள்ளனர். உடனே உணவக உரிமையாளர் வாசுதேவ் அவர்களை தடுத்து பில்லுக்கான தொகையை கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
அந்த மூன்று பேரில் ஒருவர் தான் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியால் வாசுதேவை சரமாறியாக சுட்டுள்ளார். இதனால் வாசுதேவ் அந்த இடத்திலேயே விழுந்தார். பின்னர் அவர்கள் உடனடியாக தப்பித்து ஓடியுள்ளனர்.
 
சம்பவம் அறிந்து உடனடியாக அந்த இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் வந்த காரின் நம்பரை வைத்து காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.100 கோடி டீல் - மயக்கம் போடவைக்கும் அண்டர்கிரவுன்ட் அரசியல்