டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் உதவி கோரி டெல்லி அரசு தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ள டெல்லி அரசு “டெல்லிக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல க்ரயோஜெனிக் டேங்கர் லாரிகள் தேவை. அவசர உயிர்காக்கும் வேண்டுகோள், தயவுசெய்து உதவுங்கள். அரசு உங்களுக்கு என்றும் நன்றியுடன் இருக்கும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.