12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும்,மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்,விவசாயிகளுக்கு ஓய்வூதியம், உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்.
மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கம் நடத்தியபேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்திற்கு விவசாயிகள் அணிதிரண்டு செல்கின்றனர்.
இவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இப்போராட்டத்தில் பங்கேற்ற இளம் விவசாயி உட்பட 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஷம்பு எல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விவசாயில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதேபோல், பிரோஸ்பூர் மாவட்டம் மன்சூர் தேவன் கிராமத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் விவசாயி உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.