Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டை விட ஆபத்தானவர் : நீதிமன்றம் கருத்து

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டை விட ஆபத்தானவர் :  நீதிமன்றம் கருத்து
, ஞாயிறு, 24 ஜூலை 2016 (15:12 IST)
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் வெடிகுண்டை விட ஆபத்தானவர்கள் என்று டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


 

 
சமீபத்தில், டெல்லியில் இந்தரதீத் சிங்(35) என்பவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்றதாக, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஐந்து மடங்கு அதிகமாக ஆல்கஹால் கலந்திருந்ததற்கான ஆதாரத்தையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், சம்பந்தப்பட்டவருக்கு 5 நாட்கள் சிறைத் தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்தார். மேலும், அவரது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய உத்தரவிட்டார். 
 
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தரஜீத் சிங் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி, லோகேஷ் குமார் தீர்ப்பு வழங்கும் போது “எனது பார்வையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மனித வெடிகுண்டை விட ஆபத்தான எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடியவர்கள் என தோன்றுகிறது. 
 
இவர்கள், மிதமிஞ்சிய குடிபோதையில் வாகனங்களை செலுத்தி, மற்றவர்களின் உயிர்களுக்கும் தீங்கு விளைவிப்பதுடன், தங்களையும் மாய்த்துக் கொள்ளும் அபாயத்துக்கு இவர்கள் ஆளாகி விடுகின்றனர். இருந்தாலும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 5 நாள் சிறை தண்டனையை 2 நாட்களாக குறைத்து உத்தரவிடுகிறேன்’ என தீர்ப்பளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரை விடமாட்டோம்; மிரட்டல் விட்ட யுவராஜ் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்