Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா! யாருக்கும் அழைப்பு இல்லை

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (12:50 IST)
கடந்த சில ஆண்டுகளாக ஒரு தேர்தலில் வெற்றி பெற்று மாநில முதல்வராக பதவியேற்கும் போது அண்டை மாநில முதல்வர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழா நிகழவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவால், வரும் 16ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவிற்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் டெல்லி மக்களுக்கு மட்டுமே அழைப்பு என்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என்றும் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால்ராய் என்பவர் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments