Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குமாரசாமி பதவியேற்பு விழாவில் மேலும் ஒரு முதல்வர்! பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி?

குமாரசாமி பதவியேற்பு விழாவில் மேலும் ஒரு முதல்வர்! பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி?
, திங்கள், 21 மே 2018 (12:28 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநிலத்தின் தேர்தல் முடிவு, தேசிய அளவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் நிலையை தோற்றுவித்துள்ளது. 117 எம்.எல்.ஏக்கள் உள்ள கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காமல், 104 எம்.எல்.ஏக்கள் கொண்ட பாஜகவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்த விவகாரம் நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. 
 
மேலும் எடியூரப்பா தனது ஆட்சியை காப்பாற்ற முடியாமல் போனதற்கு பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ஒரு முக்கிய காரணமாக கூறலாம்.
 
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் குமாரசாமி முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனனத்தும் ஒன்றிணையவுள்ளது. ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர்களும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
webdunia
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
பாஜகவுக்கு எதிரான ஓரணியில் எதிர்க்கட்சிகள் திரண்டால் கர்நாடகத்தில் பெற்ற வெற்றியை தேசிய அளவிலும் பெறலாம் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் - டிவிட்டரில் பரபரப்பு