Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வருடம் வரை பட்டாசு வெடிக்க தடை! – டெல்லியில் அதிரடி உத்தரவு!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (12:55 IST)
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு வரை பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பல நகரங்களில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் மனிதர்கள் வாழ முடியாத இடமாக டெல்லி மாறி வருகிறது.

இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்த வாகன போக்குவரத்தை குறைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள டெல்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால்ராய் “டெல்லியில் இந்த முறை ஆன்லைன் மற்றும் நேரடி பட்டாசு விற்பனைகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. பட்டாசு விற்கவும், வெடிக்கவும் ஜனவரி 1, 2023 வரை தடை விதிக்கப்படுகிறது. இதை கருமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ் மற்றும் மாசுகட்டுப்பாடு அதிகாரிகள் குழு செயல் திட்டம் வகுக்கப்படும். டெல்லியை மாசு அபாயத்திலிருந்து காப்பாற்ற அனைத்து வகையான பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments