Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருவயது குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி! காப்பாற்ற சென்ற ஆட்டோ டிரைவர் பலி

ஒருவயது குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி! காப்பாற்ற சென்ற ஆட்டோ டிரைவர் பலி
, வியாழன், 27 டிசம்பர் 2018 (19:08 IST)
டெல்லியில் ஒரு வயது குழந்தையுடன் ஆற்றில் விழுந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற நிலையில் இருவரையும் காப்பாற்ற முயன்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

டெல்லியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பவன்ஷா. இவர் வாடிக்கையாளர் ஒருவரை அவரது அலுவலகத்தில் இறக்கிவிட்டு ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேத்தாபூர் என்ற பகுதியில் ஆற்றுப்பாலத்தில் ஒரு வயது குழந்தையுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென ஆற்றில் குதித்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பவன்ஷா உடனே ஆட்டோவை நிறுத்திவிட்டு ஒரு நொடி கூட தாமதிக்காமல் இருவரையும் காப்பாற்றில் நோக்கில் ஆற்றில் குதித்தார். ஆனால் தன்னால் இருவரையும் காப்பாற்ற முடியாது என்பதை தாமதமாக புரிந்து கொண்ட அவர் உதவிக்கு யாராவது வருமாறு அலறினார்.

webdunia
அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். மீட்புப்படையினர் படகுடன் வந்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டனர். ஆனால் பரிதாபமாக ஆட்டோ டிரைவர் பவன்ஷாவை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் செய்த விசாரணையில் அவர் தனது கணவருடன் சண்டை போட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிய  வந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உற்சாகத்தின் உச்சத்தில் ஸ்டாலின்: செந்தில் பாலாஜி அப்படி என்ன செய்தார்?