Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் போராட்டம்: உயிர் நீத்த விவசாயிகளுக்கு நினைவுச் சின்னம்

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (10:37 IST)
வேளாண் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.

 
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
 
இந்நிலையில் நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், அந்தக் குடும்பங்களில் உள்ளவர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், வேளாண் போராட்டத்தில் உயிர் நீத்த பஞ்சாப் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்படும். விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் நிதிஉதவித் திட்டங்கள் பிரதமர் மோடி உடனே அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments