Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனாவா? பரபரப்பு தகவல்

Advertiesment
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர்
, வியாழன், 4 ஜூன் 2020 (07:44 IST)
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனாவா?
நேற்று தமிழகத்தில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை என்றும், பாதுகாப்புத் துறை செயலாளருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு கூறியபோது, ’பாதுகாப்பு செயலாளரிடம் இருந்து தொலைப்பேசி வாயிலாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்றும், முக்கிய அதிகாரிகள் சிலரும் பணி நிமித்தமாக தொலைப்பேசி வாயிலாக மற்ற அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகின்றார்கள் என்றும், மற்றபடி இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் கூறினார். 
 
மேலும் மத்திய துகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அவர் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார். மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கே கொரோனா பரவியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு மீண்டும் அனுமதி! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!