Publish Date: Mon, 06 Dec 2021 (06:51 IST)
Updated Date: Mon, 06 Dec 2021 (07:07 IST)
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்ற நிலையில் இன்றும் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
குறிப்பாக மும்பை டெல்லி அயோத்தி ஆகிய இடங்களில் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கண்ணன் பிறந்த பூமியான மதுராவில் கண்ணன் பிறந்த இடத்தில் மசூதி ஒன்று உள்ளது என்று ஆட்சேபம் தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் உருவானது
இதனை அடுத்து மதுராவில் இந்த ஆண்டு மதுரா நகருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்நகரில் இன்று போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் நகருக்குள் வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.