Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்

kurneeth singh
, புதன், 15 நவம்பர் 2023 (17:50 IST)
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இன்று உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங்  கூனர் (75)  உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த  நிலையில் இன்று உயிரிழந்தார்.

இவர் 1998,2008, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரது மறைவுக்கு முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இரங்கல் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை வெளியாகிறதா 10, 11 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை?