Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பாக இருந்தாலும் களையாய் இருக்கும் பெண்கள்! வைரலாகும் புகைப்படம்

Webdunia
திங்கள், 1 மே 2017 (06:34 IST)
பொதுவாக நல்ல கலரில் செக்க செவேலென்று இருக்கும் பெண்களைத்தான் எல்லோருக்கும் பிடிக்கும். சினிமாவில் இருந்து நிஜம் வரை வெள்ளைத்தோல் கொண்ட பெண்களுக்கு மவுசு அதிகம். திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்கள் கூட போடும் முதல் கண்டிஷன் பெண்கள் வெள்ளையாய் அழகாய் இருக்க வேண்டும் என்பதுதான்



 


ஆனால் கருப்பு நிற பெண்களும் அழகுதான் என்று ஒரு புகைப்படம் வைரலாகி நிரூபணம் செய்துள்ளது. The Uncanny Truth Teller 2' என்ற பேஸ்புக் பக்கத்தில் மூன்று கருப்பு நிற பெண்கள் குறைந்த அளவு மேக்கப்புடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. " The Faces of India they won't show you" என்ற வாசகங்களுடன் வெளியாகியுள்ள இந்த மூன்று பெண்கள் இருக்கும் புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த புகைப்படத்தை மிகக்குறுகிய நேரத்திற்குள் 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பகிர்ந்து வருகின்றனர். இதே போல் பருத்த உடல் கொண்ட பெண்களின் படங்களும் வைரலாகி வருகிறது. கருப்பும், பருத்த உடலும் கூட கொள்ளை அழகுதான் என்பதை இந்த பேஸ்புக் பக்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments