Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்பழிக்க முயன்றவனின் ஆணுறுப்பை வெட்டிய தலித் இளம் பெண்

கற்பழிக்க முயன்றவனின் ஆணுறுப்பை வெட்டிய தலித் இளம் பெண்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (18:12 IST)
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனின் ஆணுறுப்பை, கத்தியால் இளம்பெண் வெட்டிய விவகாரம் அரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அரியானா மாநிலம், ரோதக் எனும் கிராமத்தில் வசிக்கும் 17 வயதுடைய ஒரு தலித் இளம்பெண், நேற்று இரவு இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக, தனது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
 
அப்போது அங்கு இடத்திற்கு ராயிஸ்(23) என்ற முஸ்லீம் வாலிபர் வந்துள்ளார். அவர், கையில் கத்தியோடு அப்பெண்ணை பயமுறுத்தி, வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்றுள்ளார்.  ஆனால், அவரிடமிருந்து தப்பிக்க போராடிய அப்பெண், ராயிஸ் கையில்  இருந்த கத்தியை பிடுங்கி அவரின் ஆணுறுப்பை வெட்டி விட்டார். 
 
வலியால் துடித்த ராயிஸின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய கிராம மக்கள், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் பகுதி போலீசார், ராயிஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் தலித் என்பதாலும், தாக்கப்பட்டது ஒரு முஸ்லீம் வாலிபர் என்பதாலும், சாதி மோதல்களை தடுக்கும் பொருட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்