Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிரியாரால் வன்கொடுமை: ஓவியமாக வரைந்த 5 வயது சிறுமி

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (17:55 IST)
பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தனது வாயால் சொல்ல இயலாமல், அதை ஓவியமாக வரைந்துள்ளார். 


 

 
பிரேசிலில் பாதிரியாரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை ஓவியமாக வரைந்துள்ளார். ஓவியங்களை பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் மனமுடைந்து போனார்கள். 
 
மினாஸ் கெராய்ஸில் உள்ள மோண்டர் கிளாரஸ் நகரை சேர்ந்த பாதிரியார் ஜோயா டா சில்வாவிடம் 5 வயது சிறுமி பாடம் பயின்று வந்தார். கடந்த சில நாட்களாக சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இறுதியில் சிறுமி இனி நான் பாதியாரிடம் பாடம் கற்க செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். என்ன நடந்தது என்று தெரியாத பெற்றோர்கள், சிறுமியின் புத்தகத்தை பார்த்துள்ளனர்.
 
சிறுமியின் ஓவிய புத்தகத்தில், தனக்கு நேர்ந்த கொடூரத்தை ஓவியமாக வரைந்துள்ளார். இதையடுத்து பெரும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
இதையடுத்து காவல்துறையினர் அந்த பாதிரியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்