போதையில் கைக்குழந்தையை கொன்ற தந்தை.. வட இந்தியாவில் நடந்த கொடூரம்

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (15:51 IST)
மத்திய பிரதேசத்தில் குடிபோதையில் தனது சொந்த குழந்தையையே கொன்ற சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண்குழந்தையுடனும் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை, அவர் குடிபோதையில் இருந்தபோது, பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தை அழுது கொண்டிருந்தது. அப்போது குழந்தையின் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் போனதால் ஆத்திரத்தில் குழந்தையை தரையில் அடித்து கொன்றுள்ளார். பின்பு அக்குழந்தையின் சடலத்தை வீட்டின் அருகிலுள்ள ஒரு பாராங்கல்லிற்கு பின்னால் மறைத்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் வெள்ளிகிழமை காலை நகராட்சி ஊழியர் ஒருவரால் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பு போலீஸார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், அந்த குழந்தையின் தந்தையே குடிபோதையில் குழந்தையை கொன்றுள்ள விஷயம் தெரிய வந்தது. இதனையடுத்து தந்தையை ஜபல்பூர் போலீஸார் கைது செய்தனர். தான் பெற்ற குழந்தையையே தந்தை குடிபோதையில் கொன்ற செய்தி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments