Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராணுவ செலவை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக நாப்கின் வழங்கலாம்: அக்சயகுமார்

Advertiesment
aksyakumar
, புதன், 17 ஜனவரி 2018 (07:00 IST)
அக்சயகுமார் நடித்த பேட்மேன்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் புனேவில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அக்சயகுமார், 'இந்தியா தனது ராணுவ செலவை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக பெண்களுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்கலாம். வெடிகுண்டு தயாரிப்பை நிறுத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிட போவதில்லை' என்று கூறினார்

மேலும் பெண்கள் வரியில்லாத நாப்கின்களை கேட்டு போராடி வரும் நிலையில் இலவச நாப்கின்களை அரசு வழங்கினால் அதுவே பெண்களுக்கு இந்த அரசு செய்யும் பேருதவியாக இருக்கும். இன்று சமூக வலைதளத்திலும், பொதுவெளியிலும் கூட மாதவிடாய் குறித்தும், நாப்கினுக்கான தேவை குறித்தும் பெண்கள் வெளிப்படையாக பேசும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதையே இந்த படத்தின் வெற்றியாக நான் பார்க்கின்றேன்' என்று அக்சயகுமார் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ