Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவை தடுக்க ஊரடங்கு மட்டுமே தீர்வாகாது - ராகுல்காந்தி

கொரோனாவை தடுக்க ஊரடங்கு மட்டுமே தீர்வாகாது - ராகுல்காந்தி
, வியாழன், 16 ஏப்ரல் 2020 (14:18 IST)
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 12, 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1489 பேர் குணமடைந்துள்ளனர். 414 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த, இரண்டாம் கட்டமாக ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் 6 முக்கிய மெட்ரோ நகரங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் அடக்கம். 

மேலும், 400 மாவட்டங்கள் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 718 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் என்றும், 207 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மையங்களாக மாறக்கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனா பரிசோதனை விகிதம் நமது நாட்டில் மிக குறைவாக உள்ளது. இதே அளவிலான பரிசோதனை தொடர்ந்தால் கொரோனா தொற்றை கணிக்க முடியாது என காங்., முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறியுள்ளதாவது,  கொரோனாவை தடுக்க ஊரடங்கு மட்டுமே தீர்வாக அமையாது. கொரோனாவை தடுப்பதற்கு பரிசோதனைகள் போதிய அளவு மேறொள்ளப்படவில்லை; பாதிப்பு அதிமுள்ள பகுதிகளில் பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் கோரிக்கை!