கொரோனா பாதிப்பு குறித்து பிரதமருடன் முதல்வர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர்கள் பலர் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், டெ4ல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊரடங்கை நீட்டிக்கும் பிரதமரின் முடிவு சரியானது என தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. அதில் ஊரடங்கை நீட்டிக்க அனைவரும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது. அதில் பல மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்று அல்லது நாளை பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, டெல்லி மாநிலமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமரின், ஊரடங்கை நீட்டிக்கும் உத்தரவு சரியான முடிவு. இன்று, இந்தியாவின் நிலை மற்ற வளர்ந்த நாடுகளை விட சிறப்பாக உள்ளது.எனென்றால், நாம், முன்னமே ஊரடங்கை தொடங்கிவிட்டோம் அதனால், என தெரிவித்துள்ளார்.