Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு

Advertiesment
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு
, செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (17:40 IST)
சிஎஸ்ஐஆர் என்று கூறப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை பெற நெட் தேர்வு எழுதப்படுவது வழக்கமானது. 
 
இந்த நிலையில்  இந்த தேர்வு ஜூன் மாதம் 6, 7, 8 ஆகியது மூன்று நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆன்லைன் முறையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு குறித்து விவரங்களுக்கு https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பார்க்கலாம்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொடைக்கானலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் பாதி வழியிலேயே திரும்பினார்களா? என்ன காரணம்?