Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேக்கப் போட்ட தாயை அடையாளம் காண முடியாமல் அழுத மகன்...வைரல் வீடியோ

Advertiesment
make up mother
, திங்கள், 12 ஜூன் 2023 (19:07 IST)
மேக்கப் போட்டுக்கொண்ட தன் தாயை அடையாளம் காண முடியாமல் சிறுவன் அழுகின்ற வீடியோ பரவலாகி வருகிறது.

சமூக வலைதளங்கள் மலிந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், டுவிட்டர், யூடியூப், பேஸ்புக் என பலவற்றிலும் விதவிதமான ரீல்ஸ்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உலா வருகின்றன. இன்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், தன் அம்மா பியூட்டி பார்லருக்குச் சென்று அங்கு மேக்கப் போட்டுக் கொண்டு வந்தபோது, அவரைப் பார்த்த  மகன் அவரை அடையாளம் காண முடியாமல் கதறி அழுதார்.

உடனே அவரது தாய்  நான் தான் உன் அம்மா என்று கூறி அவருடன் பியூட்டி பார்லரில் உள்ளவர்களும் சிறுவனை ஆறுதல் செய்ய முயன்றாலும், தன் தாயைக் காணவில்லை என்று சிறுவன் கதறி அழுது கண்ணீர் விடும் வீடியோ  ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''நீ மட்டும்தான் குழந்தைய காட்டுவியா?'' தாயிடம் தன் குழந்தை காட்டிய சிம்பன்ஸி..வைரல் வீடியோ