பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 51 கோடீஸ்வர்களும் 22 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவருடன் அவரது தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
நேற்று மோடி தலைமலையிலான அமைச்சவரையில் பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மொத்தம் 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது.
அதில் 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 16 பேர் மீது கொலை முயற்சி, சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவித்தல், தெர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்களாம். குறிப்பாக அமித் ஷா, பியுஷ் கோயல், ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடி மேல் சொத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.