மகாராஷ்டிராவில் கட்டுமானப் பணிகளின்போது கிரேன் உடைந்து விழுந்து ஊழியர்கள் பலர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷாபூர் பகுதியில் விரைவு நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலத்தை இணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமான பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது திடீரென ராட்சத கிரேன் ஒன்று உடைந்து இரும்பு பாலத்தின் மேல் விழுந்துள்ளது. எதிர்பாராத இந்த திடீர் விபத்தில் கிரேன், பால இடிபாடுகளில் நசுங்கி 16 பேர் துடிதுடித்து இறந்தனர். பாலத்தின் இடிபாடுகளுக்கு அடியில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
உடனடியாக சம்பவ இடம் விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்துக் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.